Enter your Email Address to subscribe to our newsletters

மான்செஸ்டர் , 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.
இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்டின் நீண்டகால சாதனையை அவர் முறியடித்தார்.
வெல்ஷ் பயர் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர், 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்தார்.
இந்த ஆட்டத்தின் போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
இதுவரை 522 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர், 9 சதங்கள், 105 அரைசதங்களுடன் மொத்தம் 14,833 ரன்கள் எடுத்துள்ளார்.
முன்னதாக கீரன் பொல்லார்டு, 746 டி20 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 14,803 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அவரது சாதனையை பட்லர் முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், 463 டி20 போட்டிகளில் 22 சதங்கள், 88 அரைசதங்களுடன் 14,562 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA