Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை இன்று முதல் (ஆகஸ்ட் 6, 2026) தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.
மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், கூடுதல் கட்டணம் (எம்.ஆர்.பி-க்கு மேல் 10 ரூபாய்) வசூலிப்பதைத் தடுக்கவும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) இந்த டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும்.
அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் டாஸ்மாக் ஊழியர்கள் கமிஷன் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்க தேவை இருக்காது.
ஆன்லைனில் மதுபாட்டிலின் விலை என்னவோ, அதை மட்டும் கொடுத்தால் போதும்.
டாஸ்மாக்கின் புதிய இணையதளத்தில் நுழைந்ததும் வயது மற்றும் பாலினம் ஆகியவை கேட்கப்படும்.
அதில் 21 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கே மதுபானங்கள் விற்கப்படும்.
பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள MRP விலை என்னவோ, அதை மட்டும் செலுத்தினால் போதும்.தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அணுகும் வகையில் வெப்சைட்டில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஸ்டாக் இல்லை என்று கடை ஊழியர்கள் சொல்ல முடியாது.
உங்களுக்கு விருப்பமான பிராண்டை மறைத்து வைக்கவும் முடியாது.ஆன்லைனில் அனைத்தும் வெளிப்படையாக தெரிந்துவிடும்.
இது வெளிப்படை வாய்ந்த நிர்வாகத்தை உறுதி செய்வதற்கு பயன்படும் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b