Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் கமிஷன் பெறப்படுவதாக திமுக உறுப்பினர் ரகுபதி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம். அமைச்சரவைக் கூட்டத்திலேயே முதலமைச்சர் இது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால், ஒருவர் கூட அமைச்சராக தொடர முடியாது என்று முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளார் என்றார்.
மேலும், இதுவரை எங்கள் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. கட்சி நிதி கூட பெறவில்லை. பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த முறைகேடுகளை நாங்கள் ஒழித்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட்ட நிலையில்,
எனது கருத்துகளை முழுமையாகக் கேட்ட பிறகு பதில் அளிக்கலாம் என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து, தென் மாநிலங்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் தொகுதி மறுவரையறை.
இது தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்பதை பார்க்கலாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்,
தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து திமுக தலைவர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / P YUVARAJ