Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 77 ஆயிரத்து 502 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களில் 34 ஆயிரத்து 485 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று கோவில் உண்டியலில் ரூ.5 கோடியே 46 லட்சம் காணிக்கையாக வசூலானதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.
அன்றைய தினம் பக்தர்களுக்கு 4 லட்சத்து 24 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும், 2½ லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 2 ஆயிரத்து 926 பக்தர்கள் மருத்துவச் சேவை பெற்றனர்.
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பியுள்ளன.
இதன் காரணமாக, பக்தர்கள் வரிசை சிலாத்தோரணம் வரை நீண்டுள்ளது.
'டைம் ஸ்லாட்' டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA