Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மாநிலத்தில் உள்ள நெசவாளர்கள் மற்றும் கைத்தறி கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் செய்தியில்,
இந்தியாவின் பாரம்பரியமான கைத்தறி மரபை உயிர்ப்புடன் பாதுகாத்து வரும் நெசவாளர்களின் திறமைக்கு மரியாதை செலுத்துவதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு கைத்தறி ஆடையும் இந்தியாவின் கலாசாரம், கைவினைத்திறன் மற்றும் தன்னிறைவு உணர்வின் அடையாளமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
கைத்தறி துறையின் பிராண்ட் தூதராக செயல்படுவது தனக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைத்தறி துறையின் வளர்ச்சிக்காக ஜனசேனா கட்சியில் தனியாக ‘நெசவாளர் மேம்பாட்டு பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
நெசவாளர்களின் நலனில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியாக இருப்பதாகவும், இலவச மின்சாரம் மற்றும் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கும் ‘நேதன்ன சேவலோ’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை குறிப்பிட்ட பவன் கல்யாண், இளைஞர்கள் மற்றும் சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து அதன் சிறப்பை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு இந்தியரும் கைத்தறியை தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி, நெசவாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA