'நேதன்ன சேவலோ' திட்டத்தை தொடங்கி வைத்தார் சந்திரபாபு நாயுடு
வேட்டபாலேம் , 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் வேட்டபாலேம் மண்டலம் கொத்தப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ‘நேதன்ன சேவலோ’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்
A


வேட்டபாலேம் , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் வேட்டபாலேம் மண்டலம் கொத்தப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ‘நேதன்ன சேவலோ’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி,

மாநிலத்தில் உள்ள தகுதியான 71,636 நெசவாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.179 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

கைத்தறி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல,அது இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது.

சீராலா, தர்மவரம், வெங்கடகிரி, உப்பாடா, மங்களகிரி, பொண்டூரு போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் கைத்தறி பொருட்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளன.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் கைத்தறித் துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

சீராலா பகுதியில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பது தனக்கு பெருமை அளிப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA