Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் கூட்டணி அரசு பதவியேற்று 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ‘வீடு வீடாக தெலுங்குதேசம் - 2 ஆண்டுகளின் நம்பிக்கை - வளர்ச்சி, நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து அமைச்சர் லோகேஷ் தனது அறிக்கையில் கூறியதாவது.
இந்த பிரசாரம் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகின்றனர்.
11-வது நாளில் மட்டும் 3.40 லட்சம் வீடுகளுக்கு கட்சியினர் சென்று மக்களை சந்தித்துள்ளனர்.
பிரசாரம் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை சென்றடைந்த நாள் இதுவாகும். இதன் மூலம் கடந்த 11 நாட்களில் மொத்தம் 30.38 லட்சம் வீடுகளை தெலுங்குதேசம் கட்சியினர் சென்றடைந்துள்ளனர்.
அப்போது கூட்டணி அரசின் 2 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட ‘சூப்பர் சிக்ஸ்’ வாக்குறுதிகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தெலுங்குதேசம் கட்சியின் செயல் தலைவர் மற்றும் மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் நடைபெறும் வீடு வீடான சந்திப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
சிறப்பாக செயல்படும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நாரா லோகேஷ் பாராட்டியதுடன், இதே உற்சாகத்துடன் நிகழ்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA