தேசிய கைத்தறி தினம் - கைத்தறி நெசவாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தேசிய கைத்தறி தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், We The L
Annamalai


Nn


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேசிய கைத்தறி தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு தேசிய கைத்தறி தின வாழ்த்துகளைத் தெரிவித்து, கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,

தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.

கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும்.

இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி தொழிலின் பாரம்பரியம், நெசவாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பொதுமக்கள் கைத்தறி ஆடைகள் மற்றும் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவரது பதிவு எடுத்துரைக்கிறது.

Hindusthan Samachar / P YUVARAJ