Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)
சட்டப்பேரவையில் நீர்வளத் துறையில் லஞ்சம் பெறப்படுவதாக திமுக உறுப்பினர் ரகுபதி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
விவாதத்தில் பேசிய ரகுபதி,
நீர்வளத் துறையில் 3 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் பில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த்,
இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூற வேண்டும். அதெல்லாம் அந்தக் காலம். தற்போது ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினாலும், இந்த இடத்தில் அமர எங்கள் முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
மேலும், எந்த பில்லுக்கு, யார் பணம் கேட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் கூறுங்கள்.
உங்களுக்கு பழக்க தோஷம் இருப்பதால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என அமைச்சர் பதிலடி கொடுத்தார்.
அமைச்சரின் இந்த பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சட்டப்பேரவையில் சில நிமிடங்கள் காரசாரமான விவாதம் நடைபெற்று பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / P YUVARAJ