உரிமையுள்ள நீரை உரிமையோடு கேட்க வேண்டும் - பேரவையில் சி.பி.எம் எம்.எல்.ஏ செல்லசாமி ஆவேசம்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழகத்திற்கான நீர் உரிமை தொடர்பாக இன்றைய சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசாமி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் அவர் கூறுகையில், நமக்கான நீரை நாம் உரிமையோடு கேட்க வேண்டுமே தவிர, இதற்க
உரிமையுள்ள நீரை உரிமையோடு கேட்க வேண்டும் - பேரவையில் சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி ஆவேசம்


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழகத்திற்கான நீர் உரிமை தொடர்பாக இன்றைய சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசாமி ஆவேசமாக பேசினார்.

சட்டப்பேரவையில் அவர் கூறுகையில்,

நமக்கான நீரை நாம் உரிமையோடு கேட்க வேண்டுமே தவிர, இதற்காக முதல்வர் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தின் நீர் உரிமை என்பது பிச்சை அல்ல, அது நமது பிறப்புரிமை. அதை மத்திய அரசிடமோ அல்லது அண்டை மாநிலங்களிடமோ போராடிப் பெற வேண்டுமே தவிர, பணிந்து பெற வேண்டியதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இது போன்ற தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசுக்கு யோசனை தெரிவித்தார்.

கட்சி பேதங்களை கடந்து தமிழக நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து கருத்து தெரிவித்தார்.

முதல்வர் விஜய்க்கு ஏற்படும் அவமானம் என்பது தனிப்பட்ட ஒரு நபருக்கான அவமானம் அல்ல.

அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான அவமானமாகவே கருதப்பட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Hindusthan Samachar / vidya.b