தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் இன்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுப
Nn


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் இன்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்து, சென்னை கொண்டித்தோப்பு காவலர் சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள விவசாய சங்கத்தினரை சந்திக்க முயன்றவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விவசாய சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதி கோரியபோதும், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், செய்தியாளர்களை சந்திக்க வெளியே வந்த விவசாய சங்க நிர்வாகிகள் மீண்டும் சமுதாய நலக்கூடத்திற்குள் திரும்பிச் சென்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ