முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி 2026 இல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 20 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணைகளி
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி 2026 இல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 20 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணைகளின் போது தம்பதியினர் நேரில் ஆஜராகவில்லை. இருவரும் பிரபலங்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் தனிநபர் நலம் கருதி, நீதிமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இன்றைய விசாரணையின் போது இரு தரப்பினரும் ஆஜராவார்களா, அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்பதை அறிய திரையுலகினரும், அரசியல் வட்டாரத்தினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த முறை உரிய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று உரிய விவரங்களுடன் காணொளி வாயிலாக விளக்கம் அளிக்க இணையதள முகவரி சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b