தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்- ஈரோடு ஆட்சியர் கந்தசாமி
ஈரோடு, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவாக கைத்தறி தொழிலில் முக்கியத்துவம், நாட்டின் சமூக பொருளாதாரத்தின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. இதனை ஒட்டி கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12-வது த
Collector Kandasamy


ஈரோடு, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவாக கைத்தறி தொழிலில் முக்கியத்துவம், நாட்டின் சமூக பொருளாதாரத்தின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. இதனை ஒட்டி கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 12-வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடும் வகையில், கைத்தறி துறை சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கண்காட்சி மற்றும் தள்ளுபடி விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

இந்த சிறப்பு விற்பனையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த கண்காட்சி சிறப்பு அங்காடியில் படுக்கை விரிப்பு, தலையணை உரை, போர்வை,துண்டு, காட்டன் சேலை, மென்பட்டு சேலை, திரை சீலை, மேட் போன்ற ரகங்களும் புவிசார் குறியீடு பெற்ற புகழ்பெற்ற பவானி ஜமக்காலம் உள்ளிட்டவைகள் இந்த அங்காடியில் இடம் பெற்றிருந்தன.

கைத்தறித்துறை சார்பில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனை கடையில் 20% தள்ளுபடியுடன்

(இன்றும், நாளையும்) இரண்டு தினங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நெசவாளர்களுக்கு இ-முத்ரா கடன் தொகை ஆணை, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தொகை ஆணை, முதியோர் ஓய்வூதிய திட்டத்தொகை ஆணை உள்ளிட்ட திட்டத்தின் கீழ் சுமார் 29 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Hindusthan Samachar / ANANDHAN