Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடந்தது.
முதல்வர் இப்படி கூறும்போதே, முழு கடன் தள்ளுபடி வேண்டி தலைமை செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தலைமை செயலகத்திற்கு வெளியே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முழு பயிர்க்கடன் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில்,
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசின் ஆலோசனை கூட்டத்தில் தெளிவாக சொல்லி இருந்தோம்.
ஆனால், எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. வேளான் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இல்லை.
இந்த விவகாரத்தில் முதல்வர் கவனத்தை ஈர்க்கவே இப்போது தலைமை செயலகம் முன்பு போராட்டத்தை நடத்துகிறோம்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் சொன்னதை தான் நிறைவேற்ற சொல்கிறோம். தேர்தல் சமயத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி என்றும் பெரிய விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி என்றும் கூறியிருந்தார்.
அதை தான் இப்போது நாங்கள் நிறைவேற்ற சொல்கிறோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45+ விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
கத்தி படத்தில் அவர் விவசாயிகளுக்காக ஏகப்பட்ட வசனங்களை பேசினார். அதையெல்லாம் நம்பி தான் விவசாயிகள் அவருக்கு வாக்களித்தோம். ஆனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகள் ஏமாற்றுகிறார் என்று கூறினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b