தங்கம், வெள்ளி விலை உயர்வால் நகைப்பிரியர்கள் கலக்கம்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 6) தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. அ
தங்கம்


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 6) தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,750க்கும், சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, இன்று (ஆகஸ்ட் 7) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,750க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் 18 காரட் தங்கம் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.11,565க்கும் ஒரு சவரன் ரூ.92,520க்கும் விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P