Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அந்தக் கவிதையில், கருணாநிதியின் கொள்கை உறுதி, அரசியல் பயணம், எதிர்ப்புகளை எதிர்கொண்ட மனவலிமை மற்றும் இளைய தலைமுறைக்கு அவர் விட்டுச் சென்ற சிந்தனைகளை கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார்.
மேலும், உன் உறுதியும் தீவிரமும் இறுதிவரை வேண்டும் இளைய தலைமுறைக்கு என்றும், கல்லறைக்கு மலரேந்தி வந்தேன்; கண்ணுறக்கம் கலையுமென்று காம்புகள் கிள்ளி இதயத்தில் தூவுகிறேன் இதழ்களை மட்டும் என்றும் குறிப்பிட்டு கலைஞருக்கு தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
கருணாநிதியின் நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், வைரமுத்துவின் இந்தக் கவிதையும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு கவனம் பெற்று வருகிறது.
கலைஞருடன் பல தசாப்தங்களாக நெருங்கிய இலக்கிய மற்றும் அரசியல் தொடர்பு கொண்டிருந்த வைரமுத்து, அவரது பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய தருணங்களில் தொடர்ந்து கவிதைகள் மற்றும் உரைகள் மூலம் தனது அஞ்சலியை பதிவு செய்து வருகிறார்.
Hindusthan Samachar / GOKILA arumugam