கலைஞரின் வரலாறு தமிழ்நாடு உள்ளவரை நிலைத்திருக்கும் – தங்கம் தென்னரசு உருக்கம்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், தன் வாழ்க்கையை தமிழ்நாட்டின் வரலாற்றாக மாற்றிய மா
தங்கம் தென்னரசு


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

தன் வாழ்க்கையை தமிழ்நாட்டின் வரலாற்றாக மாற்றிய மாபெரும் பெருந்தகை கலைஞர். தன் ஒற்றைப் பேனாவின் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தத் தலையெழுத்தையும் மாற்றி, மாநிலத்தைச் செதுக்கிய நவீன சிற்பி. வரலாறு பேசும் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பவர். ஓய்வறியாச் சூரியனான அவர் நம்மைவிட்டு ஓய்வுபெற்ற நாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையைப் பெற்றுத்தந்த தலைவர் கலைஞரின் குரல் எங்களின் இதயத்துடிப்பில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அவரது திராவிடப் பெருந்தீயை நெஞ்சிலேந்தி வீறுநடை போட்டு பயணிப்போம். தமிழ்நாடும் தமிழினமும் உள்ளவரை தலைவரின் வரலாற்றை உலகம் போற்றிப் புகழும் என்றும் தங்கம் தென்னரசு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam