காவிரி விவகாரத்தை திசைதிருப்ப தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்- டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டுவதாக திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டின
டி.கே.எஸ். இளங்கோவன்


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டுவதாக திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட்டில் புதிய அம்சங்கள் எதுவும் இல்லை என்றும், வாக்குறுதிகளுக்கும் அறிவிப்புகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்பட்டதாகவும், அதை ரூ.20,000 ஆக உயர்த்துவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிவாரணம் ரூ.7,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

பட்ஜெட்டில் பெயர் மாற்றங்களைத் தவிர குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam