அனைத்துக் கட்சி எம்.பி.க்களை நேரில் அழைத்த முதலமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பதை பாராட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
Manickam


Nn


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பதை பாராட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இன்று காலை 6.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திலிருந்து நேரில் வந்த அதிகாரப்பூர்வ அழைப்புக்கு எனது நன்றிகள். கடந்த 12 ஆண்டுகளில் ஐந்து முதலமைச்சர்களை நாடாளுமன்ற உறுப்பினராக பார்த்திருக்கிறேன்.

ஆனால், முதல்முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து, கட்சி வேறுபாடின்றி ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ள இந்த சிறப்புமிக்க முடிவை வெகுவாகப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ்நாடு ஒரே குரலாக டெல்லியில் ஒலிக்க அனைவரும் இணைந்து நிற்க வேண்டும்.

அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நல்ல மரபாகும். இந்த நடைமுறை தொடர வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ