மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு - 77 அடியை கடந்தது
சேலம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின்
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு - 77 அடியை கடந்தது


சேலம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்தாலும், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 19,119 கன அடியில் இருந்து 18,875 கன அடியாக சரிவைக் கண்டுள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும், அணையின் நீர்மட்டம் 75.64 அடியில் இருந்து 77.21 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் அணையின் மொத்த நீர் இருப்பு 39.23 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.

அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற நிலையில், தற்போது 77 அடியை கடந்துள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b