Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் தலைவராக பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவர் மூன்று ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலிக்ஸ் ஜெரால்ட், 2025 டிசம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அப்போது, நீண்டகாலமாக கவனித்து வந்த தனது வணிகப் பொறுப்புகளில் இருந்து விலகி, புதிய தலைமுறைக்கான மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ள நிலையில், கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்களுக்கும், சமீபத்தில் இணைந்த சிலருக்கும் அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பெலிக்ஸ் ஜெரால்டுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், 2025 செப்டம்பர் 30ஆம் தேதி பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P