தேசிய கைத்தறி தினம்- 22 கைத்தறி விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
புதுடெல்லி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) 12-வது தேசிய கைத்தறி தின விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, கைத்தறித் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான மொத்தம் 22 கைத்தறி விருதுகளை வழங்கினார். இத
Draupati murmu


புதுடெல்லி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

12-வது தேசிய கைத்தறி தின விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, கைத்தறித் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான மொத்தம் 22 கைத்தறி விருதுகளை வழங்கினார்.

இதில் 3 சந்த் கபீர் கைத்தறி விருதுகளும், 19 தேசிய கைத்தறி விருதுகளும் அடங்கும்.

பாரம்பரிய நெசவுக் கலையை பாதுகாத்தல், தனித்துவமான நெசவுத் திறன், புதுமையான வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்திய கைத்தறித் துறை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக உள்ளது. இவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள்.

1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கிய சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு முதல் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விழாவில் கைத்தறி பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் 4 நினைவு அஞ்சல் தலைகள், கைத்தறி தொடர்பான வெளியீடுகள் வெளியிடப்பட்டதுடன், விருது பெற்ற கைத்தறிப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

பாரம்பரிய நெசவுக் கலைகளை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் கைத்தறி கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்தது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P