பழனியில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை!
பழனி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள வீதியில் வசித்து வந்தவர் நடராஜ் என்பவரின் மனைவி ராமுத்தாய், வயது 80. கணவர் இல்லாத நிலையில், ராமுத்தாய் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்
கொலை


பழனி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள வீதியில் வசித்து வந்தவர் நடராஜ் என்பவரின் மனைவி ராமுத்தாய், வயது 80.

கணவர் இல்லாத நிலையில், ராமுத்தாய் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை வீட்டில் ராமுத்தாய் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், பழனி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் தங்க முனுசாமி தலைமையிலான போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், ராமுத்தாய் அணிந்திருந்த சுமார் 7 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக வசித்து வந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P