கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து குறைப்பு - பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 15,000 கன அடியாக சரிவு
தருமபுரி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மா
Reduced water inflow from Karnataka dams


தருமபுரி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் மழைப்பொழிவு சற்று ஓய்ந்துள்ளதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து, அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.

பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b