Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் பட்ஜெட் 2026 கூட்டத்தொடரில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுடன் சேர்த்து, மக்கள் பிரதிநிதிகளின் தங்குமிட உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தை நவீன வசதிகளுடன் சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூபாய் 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அதனை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ரூ.23 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, பேரவையின் சார்பாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பாகவும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடங்கள், குடிநீர் வசதி, சாலைகள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b