Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026–27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் தொடங்குகிறது.
இதனால், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினர் இடையே காரசார விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டில், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகளுக்கு இடமளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக பட்ஜெட் விவாதத்தின்போது அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதேபோல், மாநில அரசின் நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், நலத்திட்டங்களுக்கான நிதி, வருவாய் - செலவின நிலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விரிவான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது விவகாரம், மேகதாது அணை பிரச்சினை, எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P