முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் மழை வளம் வேண்டி தெலங்கானா அரசின் வருண யாகம்
ஹைதராபாத் , 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து, ஆறுகள், அணைகள் நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு வருகிற 10-ந் தேதி நாகார்ஜுனசாகரில் வருண யாகம் நடத்துகிறது. முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அறிவுறுத்த
A


ஹைதராபாத் , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து, ஆறுகள், அணைகள் நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு வருகிற 10-ந் தேதி நாகார்ஜுனசாகரில் வருண யாகம் நடத்துகிறது.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி,

நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தலைமையில், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனசாகர் விஜய விஹார் வளாகத்தில் இந்த யாகம் நடைபெற உள்ளது.

எல் நினோ தாக்கம் குறைந்து, மாநிலம் முழுவதும் போதுமான மழை பெய்யவும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பவும், விவசாயிகள் வளமான விளைச்சல் பெறவும் வேண்டி இந்த மகா யாகம் நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

யாதகிரிகுட்டா ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலைச் சேர்ந்த வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 108 ருத்துவிக்கள், 11 ஹோம குண்டங்களில் வேத முறைப்படி யாகத்தை நடத்த உள்ளனர்.

யாகத்தின் பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் பங்கேற்க உள்ளார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக யாதகிரிகுட்டா தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA