Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம் வருஷநாடு மற்றும் மேகமலை பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், தமிழக வெற்றி கழகம் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தை முன்னிட்டு தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐஜி தலைமையிலும், திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் மேற்பார்வையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கண்ணீர் புகை வாகனம் உள்ளிட்ட சிறப்பு காவல்துறை வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam