பட்டினமருதூர் அகழாய்வில் சங்குகள், சங்கு வளையல்கள் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூர் பகுதி, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அங்கு அகழாய்வு செய்வத
Inscription


தூத்துக்குடி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூர் பகுதி, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், அங்கு அகழாய்வு செய்வதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இதன் பின்னர், இந்திய தொல்லியல் துறையின் அனுமதியை அடுத்து, கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் பட்டினமருதூர் பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இங்கு அறிவியல் முறையில் குறியிடப்பட்ட இடங்களில் சுமார் 4 மீட்டர் x 4 மீட்டர் அளவில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அகழாய்வில், பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், 10 அடி ஆழத்தில் பல்வேறு அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பழங்கால சங்குகள், பாசி மணிகள், கவுரி சிப்பிகள், அலங்கார வளைகள், சங்கு வளையல்கள், சங்குகளை அறுத்து தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள், சீன நாணயங்கள், சீன நாட்டின் செலடான் பீங்கான் ஓடுகள், உறைகிணறுகள், கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட வடிகால் குழாய்கள் ஆகியவை கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / ANANDHAN