தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிப் பகிர்வு தொடர்பாக அரசுத் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்
தமிழ்நாடு, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிப் பகிர்வு தொடர்பாக அரசுத் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2026–27ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்க
சட்டப்பேரவை


தமிழ்நாடு, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிப் பகிர்வு தொடர்பாக அரசுத் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் 2026–27ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு உரிய மத்திய வரி நிதிப் பகிர்வை உறுதி செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தும் சிறப்புத் தீர்மானத்தை தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் கொண்டு வர உள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஏற்ப, மாநிலங்கள் தங்களது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் ஒன்றிய அரசின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும், மத்திய வரிகளின் பகிர்வு சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில்,

ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.

மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை அங்கீகரிக்கும் வகையில் வெளிப்படையான, புறநிலையற்ற மற்றும் சமமான நிதிப் பகிர்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகளால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் நிதிப் பகிர்வு அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும்.

எதிர்கால மத்திய வரி பகிர்வு ஏற்பாடுகளில் தமிழ்நாட்டின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் முன்மொழிய உள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P