தமிழ்நாட்டின் உரிமையை அரசு ஒருபோதும் விட்டுத்தராது - உதயநிதி கேள்விக்கு முதல்வர் பதிலடி
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டமன்றத்தில் காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்
CM Vijay Udhayanidhi


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டமன்றத்தில் காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

காவிரி விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். மேகதாது விவாகரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றை குறிப்பிட்டு தான் பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதினேன்.

கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது 1969-ல் இதே பேரவையில் விவாதங்கள் நடந்தன. காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.

அங்கு உங்களுக்கு அவமானம் நடைபெற்றால் என்ன செய்வது என்று சிலர் கூறினார்கள், தமிழ்நாட்டு மக்களுக்காக அதனையும் தாங்கிக் கொள்ள தயாராக இருந்தேன்.

காவிரி விவகாரத்தை தமிழ்நாடு சட்டரீதியாக அணுகுவதில் உறுதியுடன் இருக்கிறோம். காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது. காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார்.

முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN