விவாகரத்து மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா - விஜய்–சங்கீதா வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழக முதல்வர் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை முதலில் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்
Vijay


Nn


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழக முதல்வர் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை முதலில் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், சங்கீதா வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, தாம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், விஜய்–சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக, தமிழக முதல்வர் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று வீடியோ கால் மூலம் ஆஜராகி மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ