Enter your Email Address to subscribe to our newsletters

துபாய் , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
10-வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை துபாயில் நடைபெறுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், தாய்லாந்து ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
7 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 30-ந்தேதி தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து செப்டம்பர் 3-ந்தேதி ஹாங்காங் அணியையும்,
5-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தான் அணியையும் சந்திக்கிறது.
இந்த ஆட்டங்கள் உள்பட போட்டித் தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
ஆசிய கோப்பை பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ள நிலையில், இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர் பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA