Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)
மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வை வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நிதி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் இந்த அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். மத்திய வரிப் பகிர்வில் தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில்,
மாநில அரசுகள் தங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்ற வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து நியாயமான, சமமான நிதிப் பகிர்வு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்குப் பிறகு மாநிலங்களின் வரி வருவாய் ஆதாரங்கள் குறைந்துள்ள நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் நிதிப் பகிர்வு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b