அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நல்ல முன்மாதிரி, மேகதாது விவகாரத்தில் அன்புமணி அரசியல் செய்ய துடிக்கிறார் – மாணிக்கம் தாகூர்
சென்னை, 08 ஆகஸ்ட் (ஹி.ச.) டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே பெண்களுக்கான திட்டங
மாணிக்கம் தாகூர்


சென்னை, 08 ஆகஸ்ட் (ஹி.ச.)

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே பெண்களுக்கான திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு காங்கிரஸ் சார்பில் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும், வேண்டுமானால் பாஜகவிடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் வந்திருக்கலாம் என்றும் கூறினார்.

முதல்முறையாக அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கருத்துகளை கேட்பது நல்ல முன்மாதிரி எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மேலும், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்ய வேண்டும் என துடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam