திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல் - ஆக்டோபஸ் கட்டிடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசை
திருமலை , 09 ஆகஸ்ட் (ஹி.ச.) திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாள் என்பதால் முதல் பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம
A


திருமலை , 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வார இறுதி நாள் என்பதால் முதல் பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில், பக்தர்களின் வரிசை வெளிப்புற பகுதிகளுக்கும் நீண்டுள்ளது.

கோகர்பம் டேம் சர்க்கிள் அருகே உள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

சர்வதரிசன டோக்கன் இல்லாமல் சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு 20 முதல் 24 மணி நேரம் வரை தரிசனத்துக்கான காத்திருப்பு நேரம் இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

87,658 பக்தர்கள் தரிசனம்

நேற்று (ஆக.8) ஒரே நாளில் 87,658 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

40,606 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.4.13 கோடி வருமானம் கிடைத்தது.

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று 4.15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

3.09 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

அடிப்படை வசதிகள்

நீண்ட நேரமாக கியூ வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தவும் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் தற்போது நிலவும் கடும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, ஏழுமலையானை தரிசிக்க வருகை தரும் பக்தர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA