ஒற்றுமையே நாட்டின் உண்மையான பலம்- பவன் கல்யாண்
அமராவதி , 09 ஆகஸ்ட் (ஹி.ச.) க்விட் இந்தியா இயக்கத்தின் நினைவு நாளையொட்டி, அந்த இயக்கத்தில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர்
A


அமராவதி , 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

க்விட் இந்தியா இயக்கத்தின் நினைவு நாளையொட்டி, அந்த இயக்கத்தில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

1942-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி மகாத்மா காந்தி விடுத்த “செய் அல்லது செத்து மடி” என்ற அழைப்பு, கோடிக்கணக்கான இந்தியர்களிடம் அசைக்க முடியாத தேசப்பற்றையும், துணிச்சலையும் ஏற்படுத்தியது. இந்த முழக்கம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியது.

தாய்நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். க்விட் இந்தியா இயக்கம், மக்களின் ஒற்றுமையும், எந்த சவாலையும் ஒன்றுபட்டு எதிர்கொள்ளும் கூட்டு மனஉறுதியுமே நாட்டின் உண்மையான பலம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளையும், அவர்களின் தியாகங்களையும் மதிக்கும் வகையில் வலிமையான, தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA