ராமர் கோயில் காணிக்கை திருட்டு, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன் கார்கே
புதுடெல்லி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ள
கார்கே


புதுடெல்லி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கார்கே,

பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்ட கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளே ஸ்ரீ ராமர் கோயிலில் நடைபெற்றதாக கூறப்படும் ‘காணிக்கை திருட்டில்’ ஈடுபட்டுள்ளனர். கோயில் கும்பாபிஷேகமும் பிரதமர் மோடியாலேயே நடத்தப்பட்டது.

இத்தகைய சூழலில், காணிக்கை திருட்டு எப்படி, ஏன் நடைபெற்றது என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து பதிலளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த திருட்டு நாட்டில் மத நம்பிக்கையும் ஆன்மிக நம்பிக்கையும் கொண்ட கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை காயப்படுத்தியுள்ளது என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P