Enter your Email Address to subscribe to our newsletters

அந்தமான், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறையை குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
அப்போது, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்குச் சென்ற அவர், அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
செல்லுலார் சிறையில் வீர சாவர்க்கர் அனுபவித்த துயரங்களையும், அங்கு அவர் எதிர்கொண்ட கடுமையான சிறை வாழ்க்கையையும் நினைவுகூர்ந்த குடியரசு துணைத் தலைவர், நாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகங்களைப் போற்றிப் பேசினார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர சாவர்க்கர் மேற்கொண்ட போராட்டம் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும் என்று குறிப்பிட்ட அவர்,
செல்லுலார் சிறையில் அவர் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்ததாக தெரிவித்தார்.
வீர சாவர்க்கரின் வாழ்க்கைப் போராட்டமும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது விடுதலைப் போராட்டமும் வரலாற்றில் எந்த நிலையிலும் யாராலும் புறக்கணிக்க முடியாத மாபெரும் வீரப் போராட்டம் என சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் விடுதலைக்காக வீர சாவர்க்கர் செய்த மகத்தான தியாகங்களும், அவர் எதிர்கொண்ட இன்னல்களும் எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவரது தியாகம் என்றும் நமக்கு பேரொளியாக வழிகாட்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P