சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் வானில் வட்டமடிப்பு
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த 6 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக உடனட
Fligt


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த 6 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

அந்தமான், டெல்லி, ஹைதராபாத், கோவா, கொச்சி, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்குவதற்காக விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், சென்னை விமான நிலையப் பகுதியில் மழை பெய்து வருவதால் தரையிறக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த விமானங்கள் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வானிலை சீரடைந்ததும் விமானங்களை ஒன்றன்பின் ஒன்றாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பயணிகள் விமானங்களின் நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ