கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை
செங்கல்பட்டு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பொத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார
சோதனை


செங்கல்பட்டு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பொத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும், உயர்ரக போதைப் பொருட்களையும் பயன்படுத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, புகார்களின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்புகளில் உள்ள அறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதால் பொத்தேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில் கஞ்சா அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தும், சோதனையில் சிக்கியவர்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam