Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பை இக்கட்சிகளின் பங்கேற்பின்மையால் தமிழ்நாடு இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026 ஏப்ரல் மாதத்தில் உருவான ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது? என்ற கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P