'ஹர் கர் திரங்கா' மாரத்தான் - ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தொடங்கி வைத்தார்
ஹரியானா, 09 ஆகஸ்ட் (ஹி.ச) ஹரியானாவின் நர்னால் நகரில் மாநில அளவிலான அரை மாரத்தான் போட்டியை அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ''ஹர் கர் திரங்கா'' என்ற கருப்
'Har Ghar Tiranga' Marathon – Flagged off


ஹரியானா, 09 ஆகஸ்ட் (ஹி.ச)

ஹரியானாவின் நர்னால் நகரில் மாநில அளவிலான அரை மாரத்தான் போட்டியை அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, 'ஹர் கர் திரங்கா' என்ற கருப்பொருளில் 'ஹரியானா உதய் அபியான்' திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், உடற்தகுதியை மேம்படுத்துவதிலும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதிலும் மாநில அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். இது நாட்டின் இளைஞர்களுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் இல்லாத ஹரியானா என்ற செய்தியை பரப்புவதற்காக 'ஹரியானா உதய்' திட்டத்தின் கீழ் தொடர்ந்து மக்கள் தொடர்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய சைனி, சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட சுமார் 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத பணத்தில் வாங்கப்பட்ட 111 சொத்துக்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியால் 2022-ம் ஆண்டு ஆசாதி கா அமிர்த மஹோத்சவ் திட்டத்தின் கீழ் ஹர் கர் திரங்கா பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிக்கவும், தேசபக்தியை வளர்க்கவும், குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் பஞ்சாயத்துகள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திரங்கா பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், பைக் மற்றும் சைக்கிள் பேரணிகள், முக்கிய இடங்களில் மூவர்ண விளக்கு அலங்காரம், அலங்காரம் மற்றும் கோலப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வந்தே மாதரத்தின் உணர்வுக்கு திரங்கா வணக்கம் என்ற கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரங்காவுடன் செல்ஃபி என்ற முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரச்சார காலத்தில் பிராந்தியம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும்.

Hindusthan Samachar / vidya.b