Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 82.05 அடியாக இருந்த நிலையில், இன்று 83.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 12,820 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 14,599 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று 9,583 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 12,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், 124.80 அடி முழு கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 106.92 அடியாக இருந்த நிலையில், இன்று 107.82 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்தும் நேற்று 8,064 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 12,183 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 2,208 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீரோட்டம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN