Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மந்திரியுமான சுரேஷ்கோபி, தனது எளிமையான செயல்பாடுகளால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில், ஆலப்புழாவில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் சுரேஷ்கோபி கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் வெளியே வந்தபோது, அவரது கார் அங்கு வரவில்லை.
இதனால் சிறிது நேரம் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் கார் வராததால், அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி பயணம் செய்தார்.
மத்திய மந்திரி ஆட்டோவில் செல்வதை பார்த்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கார் விரைவில் வந்துவிடும் என்றும், அதுவரை காத்திருக்குமாறும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், கார் வருவதற்காக காத்திருக்காமல் சுரேஷ்கோபி ஆட்டோவில் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA