ஸ்டாலின் குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்கிறது திமுக - அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டத்தில் காந்தி மியூசியத்தில் சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen குழுவினர் இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர
Nirmal Kumar


மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டத்தில் காந்தி மியூசியத்தில் சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen குழுவினர் இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோபிஷன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

மதுரையை குப்பையில்லா நகரமாக மாற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கட்சியில் முக்கிய MLAக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம் என திமுக சொன்னார்கள், பேரவையில் காவிரி விவகாரத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுவரைவுக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை, இது அரசியல். காரணங்களுக்காக ஒன்றிய அரசு இந்த மசோதாவை கொண்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் பேசுவதற்கு கூட டைம் இல்லை.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு தொகுதி குறைய வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் அவசியம் இல்லாமல் தொகுதி மறுவரையை கொண்டுவருகிறார்கள். தமிழகத்திற்கு தேவையான 39/தொகுதியை கொண்டுவர வேண்டும் சிறுபான்மை மக்களை ஒதுக்கும் தொகுதி மறு சீரமைப்பு தான்.

தொகுதி மறுவரைவு அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை முறியடிக்க வேண்டும். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

திமுக ஏற்கனவே பாஜகவோடு கைகோர்த்து அவர்களுக்கு ஆதரவாக தொகுதி மறுவரைவு மசோதாவிற்கு ஆதரவாக வெளிநடப்பு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களா?

ஏப்ரல் மாதம் அவர்கள் அனைவரும் சேர்ந்து தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

தீர்மானத்தின்படி திமுக மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும்.

மறுவரைவு மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யபோவதாக தகவல் வருகிறது . அது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கே செய்யும் திமுக செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும்

ஆட்சியில் இருந்தபோது எடுத்த முடிவுக்கும், இல்லாத போது எடுக்கும் முடிவுக்கும் திமுக ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறது என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN