Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலையடைந்தனர். இரவு வரை அவர் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடத் தொடங்கினர்.
அப்போது அப்பகுதியில் பாலு சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் காணப்பட்ட காயங்களின் தன்மையை வைத்து புலி தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் புலி தாக்கி உயிரிழந்தாரா என்பது உறுதியாகத் தெரிய வரும் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b