மதுரை விமான நிலைய விரிவாக்கம், குண்டாறு கால்வாய் பணிகளுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு – மாணிக்கம் தாகூர் வரவேற்பு
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச) மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தடையாக இருந்த குண்டாறு கால்வாய் பணிகளுக்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனத
Manickam


N


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச)

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தடையாக இருந்த குண்டாறு கால்வாய் பணிகளுக்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டுக்காக கடந்த காலங்களில் தானும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தென் மாவட்டங்களின் முழுமையான பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சியை சாத்தியப்படுத்துவதில் மதுரை விமான நிலையம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், அதன் முழுத் திறனையும் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் குண்டாறு கால்வாய் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பெரும் மைல்கல்லாக அமையும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மூலம் தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ