மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பாதியாக குறைந்தது
சேலம், 09 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வினாடிக்கு 10,808 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 5,543 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணைக்க
மேட்டூர் அணை


சேலம், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வினாடிக்கு 10,808 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 5,543 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு பாதிக்கும் குறைவாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 78.37 அடியாக உள்ளது. அணையில் 40.35 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்து நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam