விருதுநகர் மேற்கு மாவட்டத்தை கழகத்தின் வலிமையான மாவட்டமாக உருவாக்குவோம் – அமைச்சர் கீர்த்தனா
சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீர்த்தனா புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தனது எக்ஸ் தளப் பதிவில் இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், த
Keerthana


Hh


சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீர்த்தனா புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தனது எக்ஸ் தளப் பதிவில் இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தனக்கு நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், கழகத்தின் வளர்ச்சிக்காக ஊக்கப்படுத்தி வழிகாட்டி வரும் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவகாசி தொகுதியைச் சேர்ந்த கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, தாம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பில் அவர்களின் அன்பு, ஆதரவு மற்றும் ஒற்றுமை தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்டத்தை கழகத்தின் வலிமையான மாவட்டங்களில் ஒன்றாக உருவாக்குவோம் என்றும், ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கழகத்தின் வலிமையை கொண்டு சேர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடக்கம் மட்டுமே, இனி இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி உழைப்போம், வெற்றி நிச்சயம் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ